Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'மக்களின் தயவில்  தான் இந்த ஆட்சி நடக்கிறது!' -அமைச்சர் ராஜ்மோகன்

'மக்களின் தயவில் தான் இந்த ஆட்சி நடக்கிறது!' -அமைச்சர் ராஜ்மோகன்

News7 Tamil 7 hrs ago

ள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பட்டிமன்றப் பேச்சாளர் நானே சட்டமன்றத்தில் பேச ஆரம்பித்துவிட்டேன்; எங்கள் அண்ணன் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், பட்டிமன்றப் பேச்சாளர் போல் எதுகை மோனையாகப் பேசி வருகிறார்.

நான் ஒரு பேச்சாளராக இருந்து வந்தவன். பேசும்போது ஏதாவது சலசலப்பு ஏற்பட்டால், கொஞ்சம் அமைதியாக இருங்கள் என்று சொல்லுவோம். ஆனால், பேரவையில் திமுகவினர் ஏற்படுத்திய சலசலப்புக்கு மத்தியில், கொஞ்சம்கூட கலங்காமல் முழுமையாக தனது வாதத்தை முதல்வர் விஜய் முன்வைத்தார், அவர் கொடுத்ததுதான் சிறந்த பதிலடி.

சட்டப்பேரவையின் மாண்பைக் குறைக்கும் அளவுக்கு அவர்கள் தரையில் அமர்ந்ததற்குப் பெயர்தான் கொடுமை, மக்களுக்குத் தேவையானதைப் பேசாமல், இருக்கையில் இருந்து ஓடி வருகின்றனர். Running race நடத்தும் இடமா அது? தனக்கு எதிராகக் கோஷமிட்டவர்கள் எழுந்திருக்க முடியாதபோது, கை கொடுத்து தூக்கிவிட்டவர் எங்கள் முதல்வர்.

யாரு தயவும் யாருக்கும் தேவையில்லை. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் ஓட்டு இல்லாம அவங்க ஆட்சி அமைச்சிருப்பாங்களா? இத்தனை காலமா ஐயூஎம்எல் கட்சிக்கு ஏன் அமைச்சரவையில் இடம் கொடுக்கல? ஆனா, எங்க தலைவர் சொன்னதை செஞ்சாரு; மக்களோட தயவாலதான் இந்த ஆட்சி நடக்குது; வேற யாரோட தயவுலயும் ஆட்சி நடக்கல

மக்களின் கருத்தைக் கேட்டு, சுமூகமான முறையில்தான் எங்கள் தலைவர் முடிவெடுப்பார். மக்களின் நலன் சார்ந்து இறுதி முடிவை முதல்வர் அறிவிப்பார்' என்றார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil