தவெக கூட்டணிக் கட்சிகளின் 2-வது கூட்டம் சென்னை பனையூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுணா விசிக சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார், அமைச்சர் வன்னி அரசு ஆகியோரும், காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், தாரகைகதபட் ஆகியோரும், ஐயூஎம்எல் சார்பில் தலைவர் காதர் மொகிதீன், அமைச்சர் ஷாஜகான் மற்றும் சையது ஃபாரூக் பாஷா ஆகியோரும், மதிமுக சார்பில் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோரும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பகேற்க சிபிஐ மற்றும் சிபிஐஎம் கட்சிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்ட நிலையில் அக்கட்சிகள் பங்கேற்க மறுப்பு தெரிவித்தன.
இந்த நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் தொடங்கிய தவெக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில், கூட்டணிக்கு பெயர் வைப்பது, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல், உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் அடங்கிய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

