Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மியாமியில் விமான விபத்து - 5 பேர் உயிரிழப்பு!

மியாமியில் விமான விபத்து - 5 பேர் உயிரிழப்பு!

News7 Tamil 2 days ago

மெரிக்காவின், புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி விமான நிலையத்தில், நேற்று அமேசான் சரக்கு விமானம் தரையிறங்கியது.

அப்போது, பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையைத் தாண்டி, அருகில் இருந்த வாகனங்கள் மீது மோதி வெடித்து விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து 60-க்கும் மேற்பட்ட பிரிவுகளும், சுமார் 200 தீயணைப்பு வீரர்களும் உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தததாகவும். மேலும், 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து காரணமாக மியாமி விமான நிலையத்தில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதனால 250-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மியாமி விமான நிலையத்தில் அமேசான் விமானம் விபத்துக்குள்ளான காட்சிகள் வெளியாகி சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமேசான் விமான நிறுவனம், 'மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இன்று நடந்த சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்பதை அறிந்து நாங்கள் மிகுந்த துயரம் அடைந்துள்ளோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், அன்புக்குரியவர்கள் மற்றும் இந்தத் துயரமான இழப்பால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

21 ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும் அந்த விமானம், இந்தச் சம்பவம் நடந்தபோது தரையிறங்க முயன்றுகொண்டிருந்தது. இதுகுறித்த விவரங்களை அறிந்துகொள்ள, நாங்கள் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம், மேலும் எந்தவொரு விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்போம்.

21 ஏர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கீத் வின்டர்ஸ், இந்த விபத்து தங்கள் நிறுவனத்தை 'பேரழிவிற்கு' உள்ளாக்கியுள்ளதாகவும், கூட்டாட்சி புலனாய்வாளர்களுடன் ஒத்துழைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

'உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்,' என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார். 'பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பது, அதிகாரிகளுக்கு உதவுவது, மற்றும் துல்லியமான தகவல்கள் கிடைக்கும்போது அவை தெரிவிக்கப்படுவதை உறுதி செய்வது ஆகியவை எங்களது உடனடி முன்னுரிமைகளாகும்.' என்று தெரிவித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil