Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக சித்தராமையா அறிவிப்பு!

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக சித்தராமையா அறிவிப்பு!

News7 Tamil 4 months ago

கர்நாடாகாவில் கடந்த 2023 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது, சித்தராமையா முதலமைச்சராகவும், டிகே சிவகுமார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.

மேலும் இரு​வருக்​கும் தலா இரண்​டரை ஆண்டு​கள் முதலமைச்சர் பதவி வழங்க காங்​கிரஸ் மேலிடத் தலைவர்கள் சம்​மதம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சித்தராமையா முதல்மந்திரியாக பொறுப்​பேற்று 3 ஆண்​டு​கள் ஆன நிலை​யில், டி.கே.சிவகுமாருக்கு அந்த பதவியை வழங்க வேண்​டும் என அவரது ஆதர​வாளர்​கள் போர்க்​கொடி தூக்​கினர். இதையடுத்து டெல்​லி​யில் நேற்று முன்​தினம் மாலை காங்​கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே தலை​மை​யில் முதல்வர் மாற்ற விவ​காரம் தொடர்​பான ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்​தி, சித்​த​ராமை​யா, டி.கே.சிவகு​மார் உள்​ளிட்​டோர் பங்கேற்றனர்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடகாவின் புதிய முதல் மந்திரியாக டிகே சிவக்குமார் நாளை பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil