சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெரும் தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க காங்கிரஸ் கட்சித் தலைவரும், மக்களைவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி தமிழ்நாடு வந்தார்.
இந்த நிலையில் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கலை ராகுல் காந்தி சதித்து பேசினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், 'ஒரு பெற்றோர் தங்கள் பிள்ளையை இழந்து துயருறுவதைப் பார்ப்பதை விட வேதனையானது வேறு எதுவும் இல்லை. இழக்கப்படும் ஒவ்வொரு இளம் உயிருக்கும் பின்னால், அவர்களை விட்டு நீங்காத வலியைச் சுமக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது.
மேலும் சீர்கெட்ட கல்வி முறையைப் பற்றிய தீவிரமான கேள்விகளும் எழுகின்றன. வினாத்தாள் கசிவு, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது உள்ளிட்டவை மாண்வர்களின் பல ஆண்டுகாலத் உழைப்பை ஒரே இரவில் அழித்துவிட்டது.
நம் மாணவர்களிடம் நேர்மையாக இல்லாத ஒரு அமைப்பில், அவர்கள் நேர்மையாக உழைக்கச் சொல்லப்படுகிறார்கள். ஆனால் பிரதமரோ, மாணவர்களை 'மன்னிப்பது' பற்றிப் பேசும் துணிச்சலைக் கொண்டிருக்கிறார்.
துயருறும் ஒரு பெற்றோரைக்கூட அவர் சந்தித்ததில்லை. கசிந்த வினாத்தாளால் எதிர்காலம் திருடப்பட்ட ஒரு மாணவருடன் கூட அவர் அமர்ந்து பேசியதில்லை. இந்திய மாணவர்களுக்கு அவருடைய கருனை தேவையில்லை. அவர்களுக்கு அவருடைய மன்னிப்புதான் கிடைக்க வேண்டும்.

