Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் 'டோரதி'!

ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் 'டோரதி'!

News7 Tamil 7 hrs ago

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் 'டோரதி'.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். 1990-களின் தொடக்கத்தில் தமிழகத்தின் கிராமப்புறப் பின்னணியில் நடைபெறும் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

லைம்லைட் பிரிவில் திரையிடத் தேர்வு!

56-வது சர்வதேச ரோட்டர்டேம் திரைப்பட விழா 2027-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை நெதர்லாந்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. அந்த வகையில், சர்வதேச அளவில் கவனம் பெற்ற திரைப்படங்களைத் திரையிடும் லைம்லைட் (Limelight) பிரிவில் 'டோரதி' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சமூகப் பிரச்சினைகளைப் பேசும் கதை!

1990-களின் தொடக்கத்தில் தமிழகத்தின் கிராமப்புறச் சூழலில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள இப்படம், சாதிய ஏற்றத்தாழ்வுகள், வன்முறை, ஆணாதிக்கம் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டுள்ளது. மேலும், பாலின அடையாளங்கள் மற்றும் அவற்றைச் சமூகம் எதிர்கொள்ளும் விதம் குறித்தும் இப்படம் பேசுகிறது.

ஏற்கனவே டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிடல்!

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF), 'டோரதி' திரைப்படம் உலகளவில் முதன்முறையாகத் திரையிடப்பட்டது. தொடர்ந்து செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், தற்போது ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடத் தேர்வாகியிருப்பது, 'டோரதி' படக்குழுவினருக்குக் கிடைத்துள்ள மற்றொரு சர்வதேச அங்கீகாரமாக அமைந்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil