Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
செப்டம்பரில் இந்தியா வரும் புதின்.!

செப்டம்பரில் இந்தியா வரும் புதின்.!

News7 Tamil 5 days ago

பிரிக்ஸ் அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா உள்ளது. மேலும் புதுடெல்லில் இந்த ஆண்டு செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தென் ஆப்பிரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள் எக்ஸ் பதிவில் 'ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், செப்டம்பர் 12-13 தேதிகளில் புது தில்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார் - கிரெம்ளின் உதவியாளர் யூரி உஷாகோவ்,' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த டிசம்பர் 2025-ல் நடைபெற்ற 23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டிற்காக ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார் என்பது குறிப்படத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil