சிரியாவின் தலைநகர் கிழக்கு மாகாணமான டெய்ர் எல்-சோருடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில், 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் ஏராளமானோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை விரைவாக மீட்டு சிகிச்சை அளிப்பதற்காக பல ராணுவ ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. காயமடைந்தவர்கள் பால்மைரா விமான நிலையத்திலிருந்து வான்வழியாக ஹோம்ஸ் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

