Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

News7 Tamil 0 months ago

மிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்த 45-வது படமான 'கருப்பு' வெளியாகி ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது.

இதனை தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 46-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். 'விஸ்வநாத் அண் சன்ஸ்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் நாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா தாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் 'விஸ்வநாத் அண் சன்ஸ்' படத்தின் வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 'விஸ்வநாத் அண் சன்ஸ்' படம் ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்காக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil