Dailyhunt
தபால் வாக்கு எண்ணிக்கை - எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன், நயினார் நாகேந்திரன் பின்னடைவு!

தபால் வாக்கு எண்ணிக்கை - எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன், நயினார் நாகேந்திரன் பின்னடைவு!

News7 Tamil 2 weeks ago

மிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் 85.10 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் 3 முதல் 5 அடுக்கு வரை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் சுமார் 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர அசம்பாவிதத்தை தவிர்க்க 1 லட்சம் போலீசார் தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போதையை நிலவரப்படி, தவெக - 100 இடங்களிலும், அதிமுக - 79 இடங்களிலும், திமுக - 52 இடங்களிலும் இருந்து வருகிறது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

இதனையே தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 27 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த நிலையில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய இணையமைச்சர் எல்.முருகன்(அவிநாசி), தமிழிசை சௌந்தரராஜன்(மயிலாப்பூர்), நயினார் நாகேந்திரன்(சாத்தூர்) ஆகியோர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil