Dailyhunt
தபால் வாக்கு எண்ணிக்கை - காரைக்குடியில் சீமான் பின்னடைவு!

தபால் வாக்கு எண்ணிக்கை - காரைக்குடியில் சீமான் பின்னடைவு!

News7 Tamil 1 week ago

மிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் 85.10 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில் காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் டாக்டர் டி.கே.பிரபு 3,667 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

வாக்கு எண்ணும் மையங்களில் 3 முதல் 5 அடுக்கு வரை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் சுமார் 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர அசம்பாவிதத்தை தவிர்க்க 1 லட்சம் போலீசார் தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil