Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தபால் வாக்கு எண்ணிக்கை - மு.க.ஸ்டாலின் உள்பட 31 அமைச்சர்கள் பின்னடைவு!

தபால் வாக்கு எண்ணிக்கை - மு.க.ஸ்டாலின் உள்பட 31 அமைச்சர்கள் பின்னடைவு!

News7 Tamil 3 weeks ago

மிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் 85.10 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் 3 முதல் 5 அடுக்கு வரை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் சுமார் 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர அசம்பாவிதத்தை தவிர்க்க 1 லட்சம் போலீசார் தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போதையை நிலவரப்படி, தவெக - 103 இடங்களிலும், அதிமுக - 77 இடங்களிலும், திமுக - 52 இடங்களிலும் இருந்து வருகிறது.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். தமிழகம் முழுவதும் நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் மு.க.ஸ்டாலின் உள்பட 31 அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். தேர்தல் முடிவுகள் திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil