Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தமிழ் நாடு சட்டமன்றம் இன்று கூடுகிறது

தமிழ் நாடு சட்டமன்றம் இன்று கூடுகிறது

News7 Tamil 1 hr ago

மிழ் நாட்டில் தவெக தலைமையிலான அரசு பொறுப்பேற்றுள்ளது. மேலும் ஆட்சியில் காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் தமிழ் நாடு சட்டமன்றத்தின் முதல் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.

சட்டமன்றத்தின் முதல் கூட்டம் என்பதால், இந்த கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும். இதற்காக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், ஆளுநருக்கு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.

அதன் படி இன்று சட்டமன்ற கூட்டத்தில், ஆளுநர் அர்லேகர் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த உரையில் புதிய அரசின் திட்டங்கள், நோக்கங்கள் இடம் பெறும். அந்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பார். அதோடு அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும்.

மேலும் இந்த கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையும் தாக்கல் செய்யப் படும்.

தமிழ் நாட்டில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை, கொலைகள், மின்வெட்டு , பயிர்க்கடன் தள்ளுபடி, எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil