Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்" - நடிகை ஜோதிகா!

"தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்" - நடிகை ஜோதிகா!

News7 Tamil 23 hrs ago

டிகை ஜோதிகா இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜோதிகா தனது இன்ஸ்டகிராமில் பதிவிட்டு இருப்பதாவது, 'தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.

ராஜினாமா செய்யுங்கள்.

நான் மாணவர்களுடனும் நமது நாட்டின் எதிர்காலத்துடனும் துணை நிற்கிறேன், நான் பொறுப்புக்கூறலுக்கு ஆதரவாக நிற்கிறேன், நான் ஜனநாயக இந்தியாவிற்கு ஆதரவாக நிற்கிறேன், நான் சீரமைக்கப்பட்ட கல்விமுறைக்கு ஆதரவாக நிற்கிறேன், ​சோனம் வாங்சுக், அபிஜீத் திப்கே மற்றும் சௌரவ் தாஸ், தாயார்களாகிய நாங்கள் எங்கள் குழந்தைகளை உங்களைப் போல வளர்க்க விரும்புகிறோம்,

எந்தவொரு தயக்கமுமின்றி வெளிப்படையாக இருக்கும் ஜென்-ஜி (Gen Z) இளைஞர்களைப் பார்த்து பெருமைப்படுகிறேன். ​ஒன்றாக இணைந்து 'நாம்' தான் இந்தியா என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். அழுத்தத்தை உடைத்ததற்கு நன்றி. எங்களை பயமற்றவர்களாக மாற்றியதற்கு நன்றி' என்று தெரிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil