Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி மறைவு - கமல்ஹாசன் இரங்கல்!

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி மறைவு - கமல்ஹாசன் இரங்கல்!

News7 Tamil 2 weeks ago

ராஜஸ்தானில் உள்ள தனது சொந்த ஊரான உதய்பூருக்குச் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி சென்றுள்ளார்.

அப்போது நடந்த கார் விபத்தில் படுகாயம் அடைந்த ஆர்.பி. சௌத்ரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நடிகரும், மக்கள் நீ மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், 'தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களில் சிகரமாகத் திகழ்ந்த ஆர்.பி.சௌத்ரி அவர்கள் சாலை விபத்தில் நம்மைவிட்டுப் பிரிந்த செய்தி அதிர்ச்சியையும் சோகத்தையும் தருகிறது.

சினிமாவில் புது முயற்சிகளுக்குத் தயங்காத துணிச்சல்காரர். பலரை அறிமுகம் செய்தும் பலருக்குத் திருப்புமுனை ஏற்படுத்தியும் நிலைநிறுத்தியவர். சாதிக்க விரும்பும் இளம் கலைஞர்களுக்குச் சரணாலயமாக இருந்தவர் இப்படி நம்மை விட்டு பிரிந்தது தாங்கவொண்ணாத் துயர். அன்புத் தந்தையை இழந்து வாடும் தம்பி ஜீவா, தம்பி ரமேஷ் மற்றும் குடும்பத்தாருக்கு என் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil