Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தேர்வுகளால் மாணவர்களுக்கு பிரச்சனை வரக்கூடாது - நடிகர் ரவி மோகன் வலியுறுத்தல்.!

தேர்வுகளால் மாணவர்களுக்கு பிரச்சனை வரக்கூடாது - நடிகர் ரவி மோகன் வலியுறுத்தல்.!

News7 Tamil 1 day ago

திருப்பூரில் தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரவி மோகன் கலந்துகொண்டார்.

அப்போது உரையாற்றிய அவர் நீட் விவகாரம் தொடர்பாக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் பற்றி பேசினார். அப்போது அவர், 'தேர்வுகளால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகக் கூடாது. இதனால் பல மாணவர்கள் பாதிப்பு அடைகின்றனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக கடந்த ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் மாணவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. இதனை தொடர்ந்து அரசியலை தாண்டி திரைத்துறையினரும் மாணவர்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தேர்வுகளால் மாணவர்களுக்கு பிரச்சனை வரக்கூடாது என நடிகர் ரவி மோகன் வலியுறுத்தியுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil