Dailyhunt
தொகுதி குறித்து செயற்குழு ஆலோசனைக்கு பின்  முடிவு: கே.பாலகிருஷ்ணன்

தொகுதி குறித்து செயற்குழு ஆலோசனைக்கு பின் முடிவு: கே.பாலகிருஷ்ணன்

News7 Tamil 5 years ago

தமிழக சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து கட்சியின் மாநில செயற்குழு ஆலோசனைக்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையேயான தொகுதி பங்கீடு குறித்து இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை இன்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்,"தொகுதி பங்கீடு குறித்து திமுக பேச்சுவார்த்தைக் குழுவுடன் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நடத்தினனோம்.

திமுக எங்களுக்கு ஒதுக்கும் தொகுதிகள் போதுமானதாக இல்லை என அவர்களிடம் தெரிவித்தோம்" என்றார்

மேலும் பேசிய அவர்,"இன்று நடைபெறவுள்ள எங்களுடைய கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்து விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும். அதேபோல் திமுகவும் அவர்களுடைய தலைவரிடம் ஆலோசனைச் செய்துவிட்டு இன்று மாலைக்குள் முடிவை தெரிவிப்பதாக கூறியுள்ளனர்" என்றார்.

Advertisement:
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil