Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
47 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரோல்க்ஸ் வாட்ச் அணிந்திருந்தாரா அமைச்சர் ராஜ்மோகன்?

47 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரோல்க்ஸ் வாட்ச் அணிந்திருந்தாரா அமைச்சர் ராஜ்மோகன்?

Claim

அமைச்சர் ராஜ்மோகன் 47 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரோல்க்ஸ் வாட்ச் அணிந்திருந்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சோனியா காந்தி சுயசரிதை புத்தகம் பழைய புத்தக கடைக்கு கிலோ கணக்கில் விற்கப்பட்டதாக பரவும் ஏஐ வீடியோ!


Fact

அமைச்சர் ராஜ்மோகன் 47 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரோல்க்ஸ் வாட்ச் அணிந்திருந்ததாக பரப்பப்படும் பதிவுகளில், அவர் ‘Rolex Cosmograph Daytona’ கைக்கடிகாரத்தை அணிந்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, வைரல் பதிவில் இடம்பெற்றுள்ள ரோலக்ஸ் கைக்கடிகாரத்தின் படத்தையும், அமைச்சர் ராஜ்மோகன் அணிந்திருந்த கைக்கடிகாரத்தின் படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தோம். அப்போது, இரு கைக்கடிகாரங்களும் வெவ்வேறானவை என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் ராஜ்மோகன் அணிந்திருந்த கைக்கடிகாரம் ரோலக்ஸ் அல்ல; அது ஜியார்டனோ (Giordano) பிராண்டைச் சேர்ந்தது என்று தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அந்தக் கைக்கடிகாரத்தின் விலை ரூ.5,798 மட்டுமே என்றும் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடியபோது, அமைச்சர் ராஜ்மோகனும் வைரலாகும் தகவல் தவறானது என்று விளக்கமளித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், தான் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் விலை சுமார் ரூ.5,500 மட்டுமே என்று குறிப்பிட்டிருந்ததுடன், அதன் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். அந்தப் புகைப்படத்திலும் அது ரோலக்ஸ் அல்ல; ஜியார்டனோ நிறுவனத்தின் கைக்கடிகாரம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

அமைச்சர் ராஜ்மோகன் 47 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரோல்க்ஸ் வாட்ச் அணிந்திருந்ததாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். நமக்கு கிடைத்த ஆதாரங்களின் மூலம் தெளிவாகின்றது.

Sources
X Post by TVK Fact Checkdated November 18, 2026
Instagram Post by Minister Rajmohan dated November 18, 2026

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Newschecker.in Tamil