Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
டெல்லி CJP போராட்டத்தில் முதலமைச்சர் விஜய் கலந்துக்கொண்டு ஆதரவு தெரிவித்தாரா?

டெல்லி CJP போராட்டத்தில் முதலமைச்சர் விஜய் கலந்துக்கொண்டு ஆதரவு தெரிவித்தாரா?

Claim

டெல்லி CJP போராட்டத்தில் முதலமைச்சர் விஜய் கலந்துக்கொண்டு ஆதரவு தெரிவித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தவெக ஆட்சியில் முதியவரை அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கியதாக பரவும் வீடியோ உண்மையானதா?


Fact

டெல்லி CJP போராட்டத்தில் முதலமைச்சர் விஜய் கலந்துக்கொண்டு ஆதரவு தெரிவித்ததாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து அவ்வீடியோ குறித்து தேடினோம்.

அத்தேடலில் இதே வீடியோ மே 4, 2026 அன்று ஹர்ஷிதா கார்த்திக் எனும் குழந்தை நட்சத்திரத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளதை காண முடிந்தது.

ஆனால் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஜூன் 20, 2026 அன்றே அதன் முதல் போராட்டத்தை தொடங்கியது.

வைரலாகும் வீடியோவில் முதலமைச்சர் வெள்ளை நிற சட்டையணிந்துள்ளார். கண்ணில் கண் கண்ணாடி அணிந்துள்ளார். கூடவே முதலமைச்சரின் தனிச்செயலர் ஜெகதீஷ் பழனிசாமி அமர்ந்திருப்பதை காண முடிந்தது.

இதை அடிப்படையாக வைத்து தேடுகையில் வைரலாகும் வீடியோவில் காணப்பட்ட அதே தோற்றத்தில் விஜய்யும், ஜெகதீஷும் காரில் செல்லும் வீடியோக்கள் சில மே 4 அன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே காணலாம்.

மே 4, 2026 தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் வந்த தினமாகும். விஜய் தேர்தலில் அமோக வெற்றியை அடைந்ததை ஒட்டி மக்கள் ஆரவாரமுடன் அவரை வரவேற்ற காட்சியே வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

டெல்லி CJP போராட்டத்தில் முதலமைச்சர் விஜய் கலந்துக்கொண்டு ஆதரவு தெரிவித்ததாக பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

Sources
Instagram Post by Harshitha Karthik, Child Artist, Dated May 4, 2026
Rpoert by Thanthi TV, Dated June 20, 2026

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Newschecker.in Tamil