மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடந்த படகு விபத்து காரணமாக இதுவரை 13 பேர் மரணித்துள்ளனர். இந்த விபத்தில் தாய் - மகன் கட்டியணைத்தபடி இறந்ததாக தகவல் வந்த நிலையில், அந்த சம்பத்தின் புகைப்படம் என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.


சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
போலீசாரை ஒருமையில் பேசிய தவெக பெண்கள்; தேர்தல் முடிவுக்குப்பின் நடந்த சம்பவமா இது?
Fact Check/Verification
ஜபல்பூர் படகு விபத்தில் தாய் - மகன் கட்டியணைத்தபடி இறந்ததாக புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து அதுக்குறித்து தேடினோம்.
நம் தேடலில் இந்த விபத்தில் தாய்-மகன் இறந்தது தொடர்பாக இந்தியா டுடே ஊடகம் படத்துடன் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

உண்மையான படத்தை வைரலாகும் படத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் இறந்தவர்களின் உடை நிறம், உயிர்காக்கும் ஜாக்கெட்டின் நிறம் போன்றவை வேறுபட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து தேடுகையில் வைரலாகும் படத்துக்கும் ஜபல்பூர் படகு விபத்துக்கும் தொடர்பில்லை என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. அப்படம் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் அல்லது வேறு சம்பவமாக இருக்கலாம் என்று அப்பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து வைரலாகும் படத்தை செயற்கை நுண்ணறிவை கண்டறியும் Hive Moderation இணைய கருவி மூலம் சோதித்தோம். அச்சோதனையில் வைரலாகும் படம் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலியான படம் என உறுதியானது.

Tamil Nadu Election Result 2026: "ஜோசப் விஜய் ஆகிய நான்" - விகடன் அட்டைப்படம் உண்மையானதா?
Conclusion
ஜபல்பூர் படகு விபத்தில் தாய் - மகன் கட்டியணைத்தபடி இறந்ததாக பரவும் படம் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலியான படமாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report By India Today, Dated May 1, 2026
X Post By , Dated May 1, 2026
Hive Moderation Website
Self Analysis

