Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கல்லூரி மாணவிகளிடம் சில்மிஷம் செய்தவர்களை பொதுவெளியில் போலீசார் அடித்தனரா?

கல்லூரி மாணவிகளிடம் சில்மிஷம் செய்தவர்களை பொதுவெளியில் போலீசார் அடித்தனரா?

ந்திர மாநிலத்தில் கல்லூரி மாணவிகளிடம் சில்மிஷம் செய்தவர்களை போலீசார் பொதுவெளியில், சாலையில் அமர வைத்து அடித்ததாக வீடியோ ஒன்று பரவி வருகின்றது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர் ரக மிதிவண்டிகளை இலவசமாக தந்ததா தவெக அரசு?

Fact Check/Verification

கல்லூரி மாணவிகளிடம் சில்மிஷம் செய்தவர்களை பொதுவெளியில் வைத்து போலீசார் அடித்ததாக வீடியோ ஒன்று பரவிய நிலையில், இத்தகவல் குறித்த உண்மை அறிய, அவ்வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.

அதில் NDTV ஊடகத்தில் மே 26, 2025 அன்று இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

அச்செய்தியில் வீடியோவில் காணப்படும் இளைஞர்கள் போதையில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தாக்கியதாகவும், அதன் காரணமாக போலீசார் பொது வெளியில் வைத்து அவர்களை அடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் இந்தியா டுடே, டைம்ஸ் ஆஃப் இந்தியா, டெக்கன் கிரானிக்கல் உள்ளிட்ட ஊடகங்களிலும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

அச்செய்திகளிலும் போலீஸ் கான்ஸ்டபிளை அந்த மூன்று பேரும் தாக்கியதன் காரணமாகவே, போலீசார் அவர்களை பொது வெளியில் வைத்து அடித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தேடுகையில் மனித உரிமைகள் மன்றம் இச்சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

அந்த அறிக்கையில் வீடியோவில் காணப்படுபவர்கள் போலீசாரை தாக்கியுள்ளனர் என்பதையும், அவர்கள் அவர்கள் பல வழக்குகளில் குற்றவாளிகள் என்பதையும் உறுதி செய்திருப்பதை காண முடிந்தது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் கல்லூரி மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததற்காக அந்த இளைஞர்கள் போலீசாரால் தாக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என உறுதியாகின்றது.

அந்த மூன்று இளைஞர்களும் போலீஸ் கான்ஸ்டபிளை தாக்கிய குற்றத்திற்காக பொதுவெளியில் வைத்து தாக்கப்பட்டுள்ளனர்.

ஆட்டோ அல்லது காரில் பயணம் செய்யும் பெண்களுக்கு 9969777888 எனும் உதவி எண்ணை தமிழக காவல்துறை அறிவித்துள்ளதா?

Conclusion

கல்லூரி மாணவிகளிடம் சில்மிஷம் செய்தவர்களை போலீசார் பொதுவெளியில், சாலையில் அமர வைத்து அடித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Sources
Report by NDTV, dated May 26, 2025
Statement by Human Resource Forum, dated May 27, 2025

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Newschecker.in Tamil