Claim
கோவை சிறுமி கொலை வழக்குக்குப்பின் முதல்வர் விஜய் பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளிக்காமல் ஓடியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
கோவை சிறுமி கொ* வழக்கு குறித்து திமிராக பதிலளித்தாரா தவெக அமைச்சர் அருண்ராஜ்?
Fact
கோவை சிறுமி கொலை வழக்குக்குப்பின் முதல்வர் விஜய் பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளிக்காமல் ஓடியதாக பரவும் வீடியோ குறித்து தேடுகையில் அவ்வீடியோ இரண்டு மாதங்களுக்கு முந்திய பழைய வீடியோ என அறிய முடிந்தது.
கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி பாலிமர் நியூஸ் ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் "தலைமைச் செயலகம் வந்த போது கூட்டத்திற்குள் சிக்கிய விஜய்…" இதே காட்சியுடன் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது.

சன் நியூஸ், தினமலர் உள்ளிட்ட ஊடகங்களிலும் அதே தினத்தில் (மார்ச் 28) இது தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது.
கோவை சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சம்பவம் குறித்துத் தீவிரமாகவும் விரைவாகவும் விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிக்கையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக அப்பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன் நடந்த நிகழ்வை திரித்து கோவை சிறுமி கொலை வழக்குக்குப்பின் முதல்வர் விஜய் பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளிக்காமல் ஓடியதாக பரப்பப்படுகின்றது என தெளிவாகின்றது.
Sources
YouTube Video By Polimer News, Dated March 28, 2026
YouTube Video By Sun News, Dated March 28, 2026
YouTube Video By Dinamalar, Dated March 28, 2026

