Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மேற்கு வங்கம்: பாஜக வெற்றி பெற்றவுடன் பங்களாதேசத்தவர் வெளியேறினரா?

மேற்கு வங்கம்: பாஜக வெற்றி பெற்றவுடன் பங்களாதேசத்தவர் வெளியேறினரா?

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்றவுடன் அம்மாநிலத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த பங்களாதேசத்தவர் வெளியேறியதாக வீடியோ ஒன்று பரவி வருகின்றது.

சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

போலீசாரை ஒருமையில் பேசிய தவெக பெண்கள்; தேர்தல் முடிவுக்குப்பின் நடந்த சம்பவமா இது?

Fact Check/Verification

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்றவுடன் அம்மாநிலத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த பங்களாதேசத்தவர் வெளியேறியதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அதுக்குறித்து உண்மையை அறிய, முன்னதாக வீடியோவில் காணப்படும் இளைஞர் என்ன கூறுகின்றார் என்பதை கவனித்தோம்.

அந்த இளைஞர் அவரது பகுதியில் பிஸ்வ இஜ்தமா எனும் இஸ்லாமிய மாநாடு நடைப்பெறுவதாகவும், அதில் கலந்துக்கொள்ள பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமியர்கள் வருவதாகவும் இந்தி மொழியில் கூறுவதை கேட்க முடிந்தது. மேலும் அந்த இளைஞர் மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்திலுள்ள புயினான் பகுதியை சார்ந்தவர் என்று தெரிவித்தார்.

வைரலாகும் தகவலும் இளைஞர் கூறும் தகவலும் முற்றிலும் முரணாக இருப்பதால் வைரலாகும் வீடியோ குறித்து உண்மையை அறிய அவ்வீடியோவின் காட்சிகளை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.

இதன் விளைவாக வீடியோவில் காணப்படும் இளைஞரான திப் கோஷ் என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜனவரி 5, 2026 அன்று இவ்வீடியோ முதன்முதலாக பகிரப்பட்டிருப்பதை கண்டறிய முடிந்தது.

2026 பிஸ்வ இஜ்தமாவுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் வருவதாக தலைப்பிட்டு இவ்வீடியோவை அவர் பகிர்ந்திருந்தார்.

இதனையடுத்து 'பிஸ்வ இஜ்தமா' குறித்து ஊடகங்களில் தேடினோம். அத்தேடலில் 1992 ஆண்டுக்கு பிறகு மேற்கு வங்கத்தின் ஹூக்ளியில் பிஸ்வ இஜ்தமா மாநாடு நடைபெறுவதாக தி ஸ்டேட்ஸ்மென் ஊடகம் ஜனவரி 3, 2026 அன்று செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து தேடுகையில் இவ்வருடம் ஜனவரியில் ஹூக்ளி மாவட்டத்தில் பிஸ்வ இஜ்தமா மாநாடு நடைபெற்றதாக வேறு சில ஊடகங்களிலும் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகுவது யாதெனில்,

  1. வைரலாகும் வீடியோவுக்கும் மேற்கு வங்க தேர்தல் முடிவுக்கும் தொடர்பில்லை.
  2. இவ்வீடியோவில் காணப்படும் நிகழ்வு மேற்கு வங்கத்தில் தேர்தல் நடப்பதற்கு ஏறக்குறைய நான்கு மாதங்களுக்கு முன்பு ஜனவரி மாதத்தில் நடந்ததாகும்.
  3. வீடியோவில் காணப்படும் இஸ்லாமியர்கள் மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறவில்லை; பிஸ்வ இஜ்தமா மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக மேற்கு வங்கத்துக்குள் நுழைகின்றார்கள்.

Tamil Nadu Election Result 2026: "ஜோசப் விஜய் ஆகிய நான்" - விகடன் அட்டைப்படம் உண்மையானதா?

Conclusion

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்றவுடன் அம்மாநிலத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த பங்களாதேசத்தவர் வெளியேறியதாக பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

2026 ஜனவரி மாதத்தில் பிஸ்வ இஜ்தமா மாநாட்டில் கலந்துக்கொள்ள இஸ்லாமியர்கள் வருகை தந்த வீடியோவே இவ்வாறு பரப்பப்படுகின்றது.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Sources
Instagram post by Dip gosh, dated January 5, 2026
Report from The Statesman, dated January 3, 2026
Self Analysis

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Newschecker.in Tamil