Claim
முதலமைச்சர் விஜய் அவரது மகன் ஜேசன் சஞ்சயுடன் ஒன்றாக நிற்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
கோவை சிறுமி கொ* வழக்கு குறித்து திமிராக பதிலளித்தாரா தவெக அமைச்சர் அருண்ராஜ்?
Fact
முதலமைச்சர் விஜய் அவர் மகன் ஜேசன் சஞ்சயுடன் ஒன்றாக நிற்பதாக பரவும் படம் குறித்து ஆராய்கையில் அப்படம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தது.
- அப்படத்தில் விஜய்யின் ஒரு கை முற்றிலுமாக இல்லாமல் இருந்தது.
- ஜேசன் சஞ்சயின் முகம் மிகவும் மொழுமொழுவென்று, இயற்கையான மனித முகத்திற்குரிய தன்மைகள் இல்லாமல், முற்றிலும் கணினியால் வடிவமைக்கப்பட்ட (Artificial Face) தோற்றத்துடன் காணப்பட்டது.
- இப்படத்தில் 'shanu' என்று குறிப்பிட்டு கறுப்பு நிறத்தில் இடம்பெற்றிருந்தது. ஆனால் இதே இடத்தில் திரைப்பட இசையமைப்பாளர் தமன்- விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் அந்த லோகோ இடம்பெற்றிருக்கவில்லை. (அந்த லோகோ தொடர்பாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை)

- Deepai.org,Undetectable AI, Hive Moderation உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு அறியும் கருவி மூலம் வைரலாகும் படத்தை சோதிக்கையில் அப்படம் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என முடிவு வந்தது.


Sources
Instagram post by Thaman, Music Director
Deepai Website
Undetectable AI Website
Hive Moderation AI Website
Self Analysis

