Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ராஜஸ்தான் கூட்டு வன்கொடுமை: பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டாரா?

ராஜஸ்தான் கூட்டு வன்கொடுமை: பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டாரா?

Claim

ராஜஸ்தான் கூட்டு வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தகவல் ஒன்று புகைப்படத்துடன் பரவி வருகின்றது.

ராஜஸ்தான் கூட்டு வன்கொடுமை: குற்றவாளிகளை அடித்து ஊர்வலமாக அழைத்து சென்றதா ராஜஸ்தான் போலீஸ்?


Fact

ராஜஸ்தான் கூட்டு வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தகவல் ஒன்று புகைப்படத்துடன் பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

வைரலாகும் தகவலுடன் பரப்பப்படும் சிறுமி மே 21, 2026 அன்று இறந்து விட்டதாக குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.

ஆனால் பத்திரிக்கை செய்திஜூன் 18 ஆம் தேதி இரவுக்கும் ஜூன் 22 ஆம் தேதி பிற்பகலுக்கும் இடைப்பட்ட நேரத்தில் ராஜஸ்தான் சிறுமி பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரி எஸ்பி கைலாஷ் தான் அவர்கள் வைரலாகும் படத்திலிருக்கும் சிறுமி ராஜஸ்தான் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி அல்ல என்று உறுதி செய்ததாக இந்தியா டுடே செய்தி தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி நலமுடன் உள்ளார் என்றும், அவர் அவரின் பெற்றோருடன் உள்ளார் என்றும் ஸ்ரீகங்காநகர் போலீஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இவற்றின் அடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் தகவல் தவறானது என்பது உறுதியாகின்றது.

Sources
Instagram post by the @mamoj__manoj__0007, dated July 6, 2026
X post by SriGanganagar Police, dated July 8, 2026
Report by BBC Tamil, dated July 7, 2026
Report by India Today, dated July 8, 2026

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Newschecker.in Tamil