Claim
வெண்டைக்காயை வெற்றிக்காய் என பெயர் மாற்றி அறிவிக்கப்பட்டதாக நியூஸ்கார்டு ஒன்று பரவி வருகின்றது.
"த்ரிஷா எங்கள் குலவிலக்கு; அவரை விமர்சிப்பதை அனுமதிக்க முடியாது" என்று ஆதவ் அர்ஜூனா கூறினாரா?
Fact
வெண்டைக்காயை வெற்றிக்காய் என பெயர் மாற்றி அறிவிக்கப்பட்டதாக பரவும் நியூஸ்கார்டை பார்க்கும்போதே, அது கேலியாக உருவாக்கப்பட்ட போலியான பதிவு என அறிய முடிந்தது. இருப்பினும் இதை பலர் உண்மை என்று நம்பி பகிர்ந்து வருவதால் அதை முறையாக ஆய்வு செய்து விளக்க முடிவு செய்தோம்.
நம் ஆய்வில் 2026 -2027 ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் இவ்வாறு ஒரு அறிவிப்பு இடம்பெறவில்லை என அறிய முடிந்தது. இந்த அறிக்கை தமிழ்நாடு அரசின் தமிழ் மின் நூலகத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளயிட்டிருக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என தெரிவித்தார்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் நியூஸ்கார்டு கேலியாக உருவாக்கப்பட்ட போலியான நியூஸ்கார்டு என்பது உறுதியாகின்றது.
Sources
TN Agriculture Budget 2026
Phone Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai

