Claim
விகடன் ஊடகம் உதயநிதி ஸ்டாலின் பலூன் ஊதுவதுபோல் அட்டைப்படம் வெளியிட்டதாக புகைப்படம் ஒன்று பரவி வருகின்றது.
கோவை சிறுமி கொ* வழக்கு குறித்து திமிராக பதிலளித்தாரா தவெக அமைச்சர் அருண்ராஜ்?
Fact
விகடன் ஊடகம் உதயநிதி ஸ்டாலின் பலூன் ஊதுவதுபோல் அட்டைப்படம் வெளியிட்டதாக பரவும் படம் ஆராய்கையில் அப்படம் போலியானது என ஆதாரப்பூர்வமாக தெளிவாகியுள்ளது
தவறான தேதி
வைரலாகும் விகடன் அட்டைப்படத்தை உற்று நோக்கினால், அதில் உள்ள தேதியில் “31.5.1025” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய 1000 ஆண்டுகள் பின்னோக்கி இந்தத தேதி தவறாக அச்சிடப்பட்டிருப்பதே இது ஒரு போலிப் புகைப்படம் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது.

அதிகாரப்பூர்வ விகடன் அட்டைப்படம்
விகடன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்த வாரத்திற்கான ‘விகடன் பிளஸ்’ அட்டைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அப்படமானது வைரலாகும் அட்டைப்படத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது.
வைரல் அட்டைப்படம்
உண்மையான அட்டைப்படம்விகடன் ஆசிரியரின் விளக்கம்
வைரலாகும் அட்டைப்படம் குறித்து விகடன் ஆசிரியர் ஐ.பிரிட்டோவை விசாரித்தோம். அவர் அப்படம் போலியானது என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.
Sources
X post by Vikatan, dated May 25, 2025
Phone conversation with I.Britto, Editor, Vikatan
Self Analysis

