Claim
தமிழக சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. இத்தேர்தலில் நெல்லை ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும் சபாநாயகருமான அப்பாவு தோல்வியடைந்துள்ளார்.
இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பாதுகாப்பு படை வீரர்கள் அவரை வெளியேற்றியதாகவும் வீடியோ ஒன்று பரவி வருகின்றது.
Tamil Nadu Election Result 2026: "ஜோசப் விஜய் ஆகிய நான்" - விகடன் அட்டைப்படம் உண்மையானதா?
Fact
வாக்கு எண்ணும் மையத்திலிருந்து அப்பாவு வெளியேற்றப்பட்டதாக பரவும் வீடியோவை கூர்ந்து கவனிக்கையில் அவ்வீடியோவில் "தேர்தல் 2016" என்று குறிப்பிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இதை அடிப்படையாக வைத்து தேடியதில் புதிய தலைமுறை ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் மே 19, 2026 அன்று இவ்வீடியோ வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து தேடுகையில் தினமணி ஊடகத்தில் மே 20, 2026 அன்று இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிடப்பட்ட்டிருந்ததை காண முடிந்தது.
2016 ஆம் ஆண்டின் தேர்தலில் வெறும் 49 ஓட்டுகள் வித்தியாசத்தில் அப்பாவு தோல்வியடைந்தார். அச்சமயத்தில் தபால் ஓட்டுகள் எண்ணுவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறி அவர் தர்ணாவில் ஈடுபட்டதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேற்கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் நேற்று வாக்கு எண்ணிக்கையின்போது நடந்தது அல்ல; 2016 ஆம் ஆண்டின் வாக்கு எண்ணிக்கையின்போது நடந்தது என தெளிவாகின்றது.
Sources
YouTube video by Puthiya Thalaimurai, dated May 19, 2016
Report by Dinamani, dated May 20, 2016
Self Analysis

