விஜய் அரசு கிறித்தவ தேவாலயத்தை இடித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இருசக்கர வாகன ஓட்டிகள் சைடு ஸ்டாண்டை எடுத்துவிட்டுதான் ஓட்ட வேண்டும் என்றாரா விஜய்?
Fact Check/Verification
விஜய் அரசு கிறித்தவ தேவாலயத்தை இடித்ததாக பரவும் வீடியோவில் 'ஏசியாநெட் நியூஸ்' எனும் வாட்டர்மார்க் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது. இதை அடிப்படையாக வைத்து அந்த ஊடகத்தின் சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகும் வீடியோ குறித்து தேடினோம்.
அத்தேடலில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பூப்பாறையில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாக கூறி வைரலாகும் வீடியோவிலிருந்த காட்சிகளுடன் ஏசியாநெட் நியூஸ் செய்தி வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

பூப்பாறையிலிருந்து பன்னியாற்றின் ஓரங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த இரண்டு தேவாலயங்கள் உட்பட 88 கட்டிடங்கள் அகற்றப்பட்டதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இச்செய்தியானது மே 7, 2026 அன்று வெளியிடப்பட்டிருந்தது. அதாவது விஜய் தலைமையிலான தவெக தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்ற தினத்துக்கு (மே 10, 2026) முன்னர் வெளியிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் மீடியா ஒன் ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்திலும் இதே தகவலுடன் வைரல் வீடியோவின் காட்சியுடன் வீடியோ பகிரப்பட்டிருந்தது.

இதனையடுத்து தேடுகையில் நியூஸ் 18 கேரளா, மனோரமா நியூஸ், கேரளா டிடி நியூஸ் உள்ளிட்ட ஊடகங்களிலும் இச்சம்பவம் தொடர்பாக செய்தி வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது என தெளிவாகின்றது. ஆகவே இச்சம்பத்துக்கும் விஜய் அரசுக்கும் தொடர்பில்லை என்று உறுதியாகின்றது.
டாஸ்மாக் கடையில் ₹10 கூடுதலாக கேட்ட ஊழியர் தாக்கப்பட்டார்; இச்சம்பவம் தவெக ஆட்சியில் நடந்ததா?
Conclusion
விஜய் அரசு கிறித்தவ தேவாலயத்தை இடித்ததாக பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
கேரளாவில் நடந்த சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்ததாக திரித்து, சமீபத்தில் பொறுப்பேற்ற விஜய் தலைமையிலான அரசுக்கு எதிராக அவதூறு பரப்பப்படுகின்றது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report by Asianet News, dated May 7, 2026
Report by Media One, dated May 7, 2026

