Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Weekly Wrap: அரசு, அரசியல், மற்றும் பல சம்பவங்கள் குறித்து பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: அரசு, அரசியல், மற்றும் பல சம்பவங்கள் குறித்து பரவிய பொய் செய்திகள்!

ந்த வாரம் தமிழ்நாடு அரசு, அரசியல் மற்றும் வேறு பல சம்பவங்கள் தொடர்பாக பல பொய் செய்திகள் சமூக ஊடகங்களில் பரவியது.

அச்செய்திகளை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய்ந்து அவை பொய் செய்திகள் என உரிய ஆதாரங்களுடன் நிருபித்துள்ளோம்.

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான ஃபேக்ட்செக் கட்டுரைகளில் முக்கியமான ஐந்து ஃபேக்ட்செக் கட்டுரைகள் உங்கள் பார்வைக்காக.

அண்ணா நூலகத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டதாக பரவும் தவறான தகவல்!

அண்ணா நூலகத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டதாக கலைஞர் செய்திகள் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி தவறானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

கேரளாவில் தங்கையை கற்பழிக்க வந்தவரின் ஆணுறுப்பை வெட்டிய அண்ணன் என்று பரவும் தவறான வீடியோ!

கேரளாவில் தங்கையை கற்பழிக்க வந்தவரின் ஆணுறுப்பை வெட்டிய அண்ணன் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

உண்மையில் கணவன் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததால் மனைவி இச்செயலை செய்துள்ளார். இச்சம்பவம் இந்தியாவின் கேரளாவில் நடக்கவில்லை; பங்களாதேசத்தில் நடந்துள்ளது.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

கர்ப்பிணி வேடமிட்ட கொரிய இளைஞர் இந்தியாவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாரா?

கர்ப்பிணி வேடமிட்ட கொரிய இளைஞர் இந்தியாவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

வங்கதேச வீடியோவை இந்திய வீடியோவுடன் இணைத்து இந்த பொய் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

தவெக மாவட்ட செயலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முன்னாள் நிர்வாகி; இச்சம்பவம் அண்மையில் நடந்ததா?

அண்மையில் தவெக மாவட்ட செயலாளரிடம் முன்னாள் நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வீடியோ ஒன்று பரவி வருகின்றது.

உண்மையில் இவ்வீடியோ ஒரு ஆண்டுகளுக்கு முந்திய பழைய வீடியோவாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

பறப்பதாக கூறி மலையிலிருந்து குதித்த சாமியார் மரணித்தாக பரவும் தவறான வீடியோ!

பறப்பதாக கூறி மலையிலிருந்து குதித்த சாமியார் மரணித்தாக பரவும் வீடியோ தகவல் தவறானதாகும். தற்செயலாக நடந்த விபத்து இவ்வாறு திரித்து பரப்பப்படுகின்றது.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Newschecker.in Tamil