Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Weekly Wrap: கோவை சிறுமி வழக்கு மற்றும் பல சம்பவங்கள் குறித்து பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: கோவை சிறுமி வழக்கு மற்றும் பல சம்பவங்கள் குறித்து பரவிய பொய் செய்திகள்!

ந்த வாரம் கோவை சிறுமி வழக்கு, மற்றும் வேறு பல சம்பவங்கள் தொடர்பாக பல பொய் செய்திகள் சமூக ஊடகங்களில் இந்த வாரம் பரவியது.

அச்செய்திகளை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய்ந்து அவை பொய் செய்திகள் என உரிய ஆதாரங்களுடன் நிருபித்துள்ளோம்.

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான ஃபேக்ட்செக் கட்டுரைகளில் முக்கியமான ஐந்து பேக்ட்செக் கட்டுரைகள் உங்கள் பார்வைக்காக.

கோவை சிறுமி கொ* வழக்கு குறித்து திமிராக பதிலளித்தாரா தவெக அமைச்சர் அருண்ராஜ்?

தவெக அமைச்சர் அருண்ராஜ் கோவை சிறுமி கொ* வழக்கு தொடர்பான கேள்விக்கு பொறுப்பில்லாமல் திமிராக பதிலளித்ததாக பரவும் தகவல் தவறானதாகும். போலியான நியூஸ்கார்டை வைத்து இத்தகவல் பரப்பப்படுகின்றது.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

கோவை சிறுமி கொலை வழக்கு: முதல்வர் விஜய் பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளிக்காமல் ஓடினாரா?

கோவை சிறுமி கொலை வழக்குக்குப்பின் முதல்வர் விஜய் பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளிக்காமல் ஓடியதாக பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

முதலமைச்சர் விஜய் அவரது மகன் ஜேசன் சஞ்சயுடன் இருக்கும் படம் உண்மையானதா?

முதலமைச்சர் விஜய் அவர் மகன் ஜேசன் சஞ்சயுடன் ஒன்றாக நிற்பதாக பரவும் படம் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலியான படமாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

இனிமேல் பாஜகவை விமர்சிக்க வேண்டாம் என்று ஸ்டாலின் கூறினாரா?

இனிமேல் பாஜகவை விமர்சிக்க வேண்டாம் என்று முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

உதயநிதி ஸ்டாலின் பலூன் ஊதுவதுபோல் அட்டைப்படம் வெளியிட்டதா விகடன்?

விகடன் ஊடகம் உதயநிதி ஸ்டாலின் பலூன் ஊதுவதுபோல் அட்டைப்படம் வெளியிட்டதாக பரவும் படம் போலியானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Newschecker.in Tamil