Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை - வானிலை தகவல்

அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை - வானிலை தகவல்

NewsTamil 24X7 1 week ago

டுத்த 24 மணிநேரத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் தொடங்க வாய்ப்பு என்றும் கணித்து உள்ளது.

மே 4ஆம் தேதி முதல் அக்னி
தமிழ்நாட்டில், மார்ச் மாதத்தில் இருந்து கோடை காலம் தொடங்கியது. மே 4ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை அக்னி வெயில் சுட்டெரிக்கும் என வானிலை அறிவிப்பு வெளியிட்டது. அதற்கு ஏற்றார் போல் கடந்த வாரங்களில் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் வெப்பம் 105 டிகிரி செல்சியஸை கடந்து பதிவானது. தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்குமோ? என அச்சப்பட்ட நிலையில், திடீரென சென்னை உட்பட வட மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது.

வானிலை தகவல்
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழையின் தாக்கம் உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.



மே 16ஆம் தேதி
விழுப்புரம்
கடலூர்
மயிலாடுதுறை
தேனி

மே 17ம் தேதி
திண்டுக்கல்
தேனி
கோவை
நீலகிரி

சென்னையில்...
சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்...
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் புதுச்சேரி, மதுராந்தகம், கடலூர், விழுப்புரம், சீர்காழி, செங்கல்பட்டு திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை கொட்டி தீர்த்தது.

அடுத்த 24 மணி நேரத்தில்...
தெற்கு வங்கக் கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் - நிகோபார் தீவு பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது.

Related Link

IPL 2026 புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் RCB

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: NewsTamil 24X7