தமது அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட SOFA ஏற்கெனவே ஆர்டர் செய்த ஒன்று தான் என்று, திருமாவளவன் கூறி உள்ளார்.
புஷ்பா பட பாணியில் SOFA ஆட்சி நடைபெறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புகார் கூறிய நிலையில் விளக்கம் அளித்து உள்ளார்.

மகளிர் உரிமைத்திட்டம், மகிழ்ச்சி
இதுதொடர்பாக, செய்தியாளர்களை சந்தித்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாவது'
மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடரும் என கூறி இருப்பது, மகிழ்ச்சி தருகிறது. அதனை வரவு வைக்க வேண்டிய நாள் சற்று தள்ளிப் போவதாக கூறினாலும், விரைவில் அனைவருக்கும் வரவு வைக்கப்படும் என சொல்வது வரவேற்கத்தக்கது.

ஏற்கெனவே ஆர்டர் செய்த SOFA தான்
நாங்கள் ஏற்கெனவே ஆர்டர் செய்த சோஃபா தான் அலுவலகத்துக்கு வந்தது. விசிக அலுவலகத்துக்கு சோஃபா வந்ததை குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் கூறவில்லை. அதிமுகவில் உருவாகியிருக்கும் ஒரு அணியின் தலைவரை, எம்எல்ஏக்களை சந்திக்க முதல்வர் விஜய் சென்றதை தான் உதயநிதி சுட்டிக் காட்டி உள்ளார் என்று கருதுகிறேன். இது தற்செயலாக நடந்தது. விஜய்யின் வருகைக்காக சோஃபா ஆர்டர் செய்யப்படவில்லை. தவறான தகவலை பரப்ப வேண்டாம்.

முடிவுக்காக காத்திருந்தேன்
முதலமைச்சர் பதவிக்காக நான் காத்திருக்கவில்லை. நான் முடிவை அறிவிக்க காலம் தாழ்த்தியது அதற்காக தான் என்று அவதூறுகளை வாரி இறைக்கின்றனர். இடதுசாரிகளின் முடிவுக்காகவே காத்திருந்தேன். என்னை சுற்றி என்ன நடந்தது? என்று எனக்கு பெரிதாக தெரியவில்லை. செய்தியை திரித்து பரப்புகிறார்கள்.
இவ்வாறு திருமாவளவன் கூறி உள்ளார்.
Related Link

திமுகவின் அமைப்பு முறையில் மாற்றம் - ஸ்டாலின் உறுதி

