Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு - முதலமைச்சர் விஜய் ஆணை

அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு - முதலமைச்சர் விஜய் ஆணை

NewsTamil 24X7 1 week ago

மிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான அக விலைப்படி 2 சதவீதம் உயர்ந்துள்ளது. 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள்...
இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது; முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, மக்கள் நலனை முன்னிறுத்தி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள உறுதிமொழி அளித்து உள்ளது. இந்த திட்டங்களை வடிவமைப்பதிலும், அவற்றை முழுவீச்சில் நடைமுறைப்படுத்துவதிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனர்.

2026 ஜனவரி 01 முதல்...
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு 01.01.2026 முதல் 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில், மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் இதனால் பயன்பெறும் வகையில், , 01.01.2026 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க முதல்வர் விஜய், பரிசீலித்து உத்தரவிட்டுள்ளார்.

16 லட்சம் பேருக்கு...
இந்த உத்தரவால், 58% ஆக உள்ள அகவிலைப்படி 2 சதவீதம் உயர்ந்து 01.01.2026 முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டொன்றுக்கு அரசுக்கு 1,230 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி, இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.
இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Link

ஏற்கெனவே ஆர்டர் செய்த SOFA தான் - திருமாவளவன் விளக்கம்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: NewsTamil 24X7