Dailyhunt
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற உறுதி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற உறுதி

NewsTamil 24X7 1 week ago

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தர அனைத்து முயற்சிகளையும் அதிமுக மேற்கொள்ளும் என எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.

புதுச்சேரியில் கம்யூனிஸ்ட் கட்சிகளை கூட்டணியில் சேர்க்காதது ஏன்? என திமுகவுக்கு கேள்வி எழுப்பிய அவர், தமிழ்நாட்டில் ஒரு நிலைப்பாடு புதுவையில் ஒரு நிலைப்பாடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுவதாகவும் குற்றம்சாட்டினார்.

புதுச்சேரியில் எடப்பாடி பழனிசாமி
புதுச்சேரி மாநில சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக சார்​பில் உப்​பளம் தொகு​தி​யில் போட்​டி​யிடும் மாநில செய​லா​ளர் அன்​பழகன், உருளை​யன்​பேட்டை தொகு​தி​யில் போட்​டி​யிடும் காந்தி ஆகியோரை ஆதரித்து அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் எடப்​பாடி பழனி​சாமி வாக்கு சேகரித்து பேசியதாவது;
மாநிலத்​தில் ஒரு கட்​சி​யும், மத்​தி​யில் ஒரு கட்​சி​யும் ஆட்சி செய்​தால், மாநிலத்​துக்கு தேவை​யான திட்​டங்​களும் கிடைக்​காது, நிதி​யும் கிடைக்​காது. ஒரு வண்​டிக்கு இரண்டு சக்​கரம் இருந்​தால் தான் இலக்கை அடைய முடி​யும். அந்த அடிப்​படை​யில் தேசிய ஜனநாயக கூட்​டணி அமைந்​திருக்​கிறது.

தலை குனிய வைத்த கட்சி
திமுக தலை​வர் ஸ்டா​லின் இங்கு தேர்​தல் பிரச்​சா​ரத்துக்கு வரு​வார். தமிழகத்​தில் கொள்​ளை​யடித்​தது போதாது என்று இங்​கும் கொள்​ளை​யடிக்​கப் பார்க்​கிறார். தமிழகத்​தில் கலெக் ஷன், கமிஷன், கரப்​ஷன் நடக்​கிறது. டாஸ்​மாக்​கில் மட்​டும் பல்​லா​யிரக்​கணக்​கான கோடி ரூபாய்க்கு ஊழல் செய்​துள்​ளனர்.

புதுச்​சேரி​யில் மது​பான விற்​பனை அதி​க​மாக இருக்​கிறது. அது ஸ்டா​லினுக்கு கண்ணை உறுத்​திக்​கொண்டு இருக்​கிறது. கண்​ணுக்கு தெரி​யாத காற்​றி​லும் ஊழல் செய்​கின்ற ஒரே கட்சி திமுக. மத்​தி​யில் ஒரு லட்​சத்து 74,000 கோடி ரூபாய் கொள்​ளை​யடித்த 2ஜி ஸ்பெக்ட்​ரம் ஊழல் நாட்​டையே உலுக்கி விட்​டது. உலகள​வில் கூட இந்த அளவுக்கு ஊழல் நடக்​க​வில்​லை. நாடு முழு​வதும் நம்மை தலைகுனிய வைத்த கட்சி திமுக.
இவ்வாறு பேசி, இபிஎஸ் வாக்கு சேகரித்தார்.

தேமுதிகவுக்கு பதில்
ராஜ்யசபா எம்​.பி. பதவியை தேமு​தி​க​வுக்கு ஒப்​பந்​தப்​படி அதி​முக கொடுக்​க​வில்லை என்று பிரேமலதா கூறியதற்கு பழனி​சாமி பதில் அளித்​துள்​ளார். நெய்​வேலி பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் அவர் பேசியதாவது;
விஜய்​காந்த், திமுகவை கடுமை​யாக எதிர்த்​தார். திமுகவை கடுமை​யாக எதிர்த்த கட்சி தேமு​திக. கருணாநி​தியை மேடை​யில் வைத்​துக் கொண்டே அவர் முன்​னிலை​யில் விஜய்​காந்த்தை நடிகர் வடிவேலு கடுமை​யாக விமர்​சித்​தார்.

அப்​படிப்​பட்ட தி​முக உடன் ஏதோ காரணங்​களுக்​காக தேமு​திக கூட்​டணி அமைத்​திருக்​கிறீர்​கள்​. அது உங்​கள்​ சொந்​த விஷ​யம்​. அதற்​குள்​ நான்​ செல்​லவில்​லை. ஆனால், இன்று நம்​மைப் பார்த்து ராஜ்யசபா எம்பி பதவியை தேமு​தி​க​வுக்கு தர​வில்லை என்று சொல்​கிறார்​கள். 2026ல் அதி​முக​ உடன் கூட்​டணி அமைத்து தேமு​திக போட்​டி​யிட்​டால், ராஜ்யசபா எம்​.பி. பதவி வழங்​கப்​படும் என்று நான் தெளி​வாக கூறினேன்.
இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

Related Link

இபிஎஸ் விமர்சனமும் ஸ்டாலின் பதிலடியும்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: NewsTamil 24X7