Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இந்தி ரீமேக்கில் நடிகை வித்யா பாலன் நடிப்பதாக தகவல்

இந்தி ரீமேக்கில் நடிகை வித்யா பாலன் நடிப்பதாக தகவல்

NewsTamil 24X7 1 week ago

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த தெலுங்கு படம் இந்தியில் ரீமேக் :

ஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள "சங்க்ராந்திக்கு வஸ்துன்னாம்" தெலுங்கு படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகை வித்யா பாலன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் அனீஸ் பாஸ்மி இயக்க, தெலுங்கில் தயாரித்த தில் ராஜுவே இந்தி ரீமேக்கையும் தயாரிக்கிறார்.

தெலுங்கில் வெங்கடேஷ் நடித்த கதாபாத்திரத்தில் அக்சய் குமாரும், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரத்தில் வித்யா பாலனும், மீனாட்சி சவுத்ரி கதாபாத்திரத்தில் ராஷி கண்ணாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளனர்.

அர்ஜுன் தாஸ், அன்னா பென் நடித்துள்ள "கான்சிட்டி" :

அர்ஜுன் தாஸ், அன்னா பென் நடித்துள்ள "கான்சிட்டி" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸுடன், அன்னா பென், வடிவுக்கரசி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள நிலையில், இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

வைரலாகும் ஆலியா பட்டின் புகைப்படங்கள், வீடியோக்கள் :

உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆலியா பட் பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகை ஆலியா பட் முதன்முறையாக கலந்து கொண்டு சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தார்.

மேலும், தனது வசீகரமான தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். விழாவில், சர்வதேச புகைப்படக் கலைஞர்களின் கேமராக்களுக்கு புன்னகையுடன் போஸ் கொடுத்தது ரசிகர்களை கவர்ந்தார்.

நடிகர் ராம் சரண் நடித்துள்ள "பெடி" திரைப்படம் :

நடிகர் ராம் சரண் நடித்துள்ள "பெடி" திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் நேரடி இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 23-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதில் ராம் சரண் மற்றும் ஸ்ருதி ஹாசனின் சிறப்பு நடனக் காட்சியும் இடம்பெறும் எனவும், பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் பங்கேற்பார் எனவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், மே 18-ம் தேதி திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

"மா இன்டி பங்காரம்" திரைப்படம் ஜூன் 19-ம் தேதி வெளியீடு :

நடிகை சமந்தாவின் புதிய திரைப்படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகை சமந்தா நீண்ட நாட்களுக்கு பிறகு தெலுங்கில் நடித்துள்ள "மா இன்டி பங்காரம்" திரைப்படம் மே 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஜூன் 19-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்த திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இது குடும்ப பின்னணி கொண்ட அதிரடி திரைப்படமாக உருவாகி உள்ளது.

Related Link

ஒரு முறை இல்லை, பலமுறை வருவதுதான் காதல்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: NewsTamil 24X7