Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கொச்சி முதல் லட்சத்தீவு வரை விரைவில் நீர் விமான சேவை

கொச்சி முதல் லட்சத்தீவு வரை விரைவில் நீர் விமான சேவை

NewsTamil 24X7 1 week ago

வெற்றிகரமாக சோதனை நடத்தி முடித்ததாக தகவல் :

கேரளம் மாநிலம் கொச்சியில் இருந்து லட்சத்தீவு உள்ளிட்ட தீவுகளுக்கு செல்ல நீர் விமான சேவை விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொச்சி விமான நிலையத்தில் இருந்து லட்சத்தீவுக்கு நீர் விமான சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மும்பையை சேர்ந்த சர்வோதயா கூட்டுறவு வங்கி உரிமம் ரத்து :

மும்பையைசேர்ந்த சர்வோதயா கூட்டுறவு வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்தது. போதிய மூலதனம் இல்லாதது மற்றும் மோசமான வருவாய் வாய்ப்புகளை காரணம் காட்டி, அவ்வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மே 12 ஆம் தேதியுடன் வங்கியின் அனைத்து செயல்பாடுகளும் நிறுத்திக் கொள்ளப்பட்டது.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாட்டிற்கே பெரும் அவமானம் :

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம், நாட்டிற்கே பெருத்த அவமானம் என்று கர்நாடகா மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் விமர்சனம் செய்தார். சர்வதேச அரங்கில் நமது நாட்டின் கல்வித்துறை நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாகி விட்டதாக வேதனை தெரிவித்தவர், நீட் தேர்வு முறைகேடு குறித்து இதுவரை யாரும் வாய் திறக்கவில்லை என்று கூறினார்.

"அமுல்" அறிவித்த பால் விலை உயர்வு இன்று முதல் அமல் :

முன்னணி பால் உற்பத்தி நிறுவனங்களான அமுல் மற்றும் மதர் டெய்ரி அறிவித்த பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அனைத்து வகையான பாலும் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளன. தீவன விலை மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதே விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

பேருந்துக்காக காத்திருந்த பெண்கள் மீது மோதிய கார் :

தெலங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சில்லா அருகே பேருந்துக்காக காத்திருந்த பெண்கள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கஜசிங்கவரம் பகுதியில் பெண்கள் சிலர் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்று பேருந்தில் அவர்கள் ஏற முயன்ற போது, பின்னால் வேகமாக வந்த கார் மோதியது.

Related Link

கேரளத்தின் முதல்வராக சதீஷன் தேர்வு

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: NewsTamil 24X7