Dailyhunt
குடும்பத்திற்கு ரூ.10,000 - இபிஎஸ் மீண்டும் உறுதி

குடும்பத்திற்கு ரூ.10,000 - இபிஎஸ் மீண்டும் உறுதி

NewsTamil 24X7 1 week ago

திமுக ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என இபிஎஸ், மீண்டும் உறுதி அளித்துள்ளார்.

சென்னையில் இபிஎஸ்...
சென்னையில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, வேளச்சேரி, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், தி.நகரில் வாக்கு சேகரித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;
திமுக ஆட்சியில் விலைவாசி கடுமையாக அதிகரித்து உள்ளது. இந்த ஆட்சி தொடர வேண்டுமா? திமுக குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 'யார் அந்த சார்?' என கண்டுபிடிக்கப்படும். திமுக ஆட்சியில் தரமான வடிகால் வசதி செய்யப்படவில்லை. அதனால் தான் சென்னை மக்கள் மழை காலங்களில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

வாக்குறுதிகள் என்னாச்சு?
ஊழல் செய்வது தான் திமுகவின் முதன்மையான வேலையாக இருக்கிறது. திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதா? நான்கில் ஒரு பங்கு வாக்குறுதி தான் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கல்விக் கடன் ரத்து செய்யப்படவில்லை. காஸ் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படவில்லை. ரேசன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை அதிகமாக போடுவதாகச் சொன்னார்களே, போட்டார்களே?

கஞ்சா ஒழிக்கப்படும்
தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து உள்ளது. கஞ்சா விற்பவர்களுக்கு திமுக அரசே, துணை நிற்கிறது. மொத்தத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அதிமுகவில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை திமுக நிறுத்தி வைத்திருக்கிறது. அதிமுக ஆட்சி அமைந்த உடன் 3 மாதங்களில் கஞ்சா ஒழிக்கப்படும்.

முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
மின் கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டு உள்ளது. வீட்டு வரி உயர்த்தப்பட்டு உள்ளது.

நாட்டில் குப்பைக்கும் வரிபோட்ட ஒரே ஆட்சி திமுக தான். கருணாநிதி குடும்பம் வளமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நடைபெறும் குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல் இந்த நாட்டுக்கு தேவையா? வரவிருக்கும் தேர்தலில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு பேசி, எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

Related Link

அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள் - விஜய் ஆவேசம்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: NewsTamil 24X7