Dailyhunt
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி

NewsTamil 24X7 1 week ago

மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

ஆளும்கட்சி 81 இடங்களில் மட்டுமே வெற்றி மொத்தமுள்ள 294 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், முடிவுகள் வெளியிடப்பட்ட 293 தொகுதிகளில் 206 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன், பாஜக ஆட்சி அமைக்கிறது.

அதே சமயம், 3 முறை ஆளும்கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெறும் 81 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. காங்கிரஸ் 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடத்திலும், உள்ளூர் கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

பாஜக முதல்வர் வேட்பாளர் சுவேந்து அதிகாரி வெற்றி
மேற்குவங்க மாநில தேர்தலில் பாஜக முதலமைச்சர் வேட்பாளரான சுவேந்து அதிகாரி, தாம் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். நந்திகிராம் தொகுதியில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 301 வாக்குகள் பெற்று 9 ஆயிரத்து 665 வாக்குகள் வித்தியாசத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பிரதீபாகரை தோற்கடித்தார்.

முதலமைச்சர் மம்தா பானர்ஜி தோல்வி
மாநில பாஜக தலைவரான சுவேந்து அதிகாரி, பவானிபூர் தொகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்டு, 73 ஆயிரத்து 917 வாக்குகள் பெற்று 15 ஆயிரத்து 105 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

திரிணாமுல் காங். கட்சிக்கு பெரும் பின்னடைவு
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பவானிபூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் சுவேந்து அதிகாரி, 73,917 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். முதலமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி தோல்வியை தழுவியது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

பிரதமர் மோடி பெருமிதம்
மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்து உள்ளார். டெல்லியில் கட்சித் தொண்டர்களிடையே உரையாற்றி பிரதமர் மோடி, மேற்குவங்கத்தில் காட்டாட்சி அகன்று புதிய அத்தியாயம் மலரப் போவதாக தெரிவித்தார். மகளிர் இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தோல்வியடையச் செய்த காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளை பெண்கள் தண்டித்து விட்டதாகவும் தெரிவித்தார்.

Related Link

கேரளத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: NewsTamil 24X7