முருகன் கோயிலில் செடல் திருவிழா :
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஒறையூர் ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு செடல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதை ஒட்டி கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
இதை முன்னிட்டு கோவில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ பாலமுருகனுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
இதில் முக்கிய நிகழ்வான செடல் திருவிழாவிற்கு காப்புக் கட்டி விரதம் இருந்த பக்தர்கள் ராட்டின செடல் மற்றும் முதுகில் அலகு குத்தி கிரேன், டிராக்டர், வேன் உள்ளிட்ட வாகனங்கள் முக்கிய வீதிகளில் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Related Link

அண்ணனின் வீட்டை கம்பி, கற்களால் தாக்கிய தம்பிகள்

