ரெய்னா சாதனையை முறியடித்த ஆயுஷ் மாத்ரே :
ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்காக சேப்பாக்கம் மைதானத்தில் இளம் வயதில் அரைசதம் விளாசிய வீரர் என்ற சுரேஷ் ரெய்னாவின் சாதனையை ஆயுஷ் மாத்ரே முறியடித்துள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 43 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் 18 வயது 261 நாட்களில் சென்னை அணிக்காக அரை சதம் எடுத்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பாக சிஎஸ்கே அணி ஜாம்பவான் சுரேஷ் ரெய்னா, தனது 21 வயது 148 நாட்களில் சிஎஸ்கே அணிக்காக சேப்பாக்கம் மைதானத்தில் முதல் அரை சதம் அடித்தார்.
அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் விலகல் :
மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரில் இருந்து, தரவரிசையில் நம்பர் 8-ல் இடம்பிடித்த அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் விலகியுள்ளார். மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் மொனாக்கோவில் நாளை தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தொடரிலிருந்து முன்னாள் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இங்கிலாந்தின் ஜாக் டிராபர், பென் ஷெல்டன், டாமி பால், ஆர்தர் பில்ஸ் உள்பட 8 வீரர்கள் விலகியுள்ளனர்.
விளம்பரத்தில் நடிக்கும் ஜாம்பவான்கள் மெஸ்ஸி, ரொனால்டோ :
சமீபத்தில் கால்பந்து ஜாம்பவான்கள் மெஸ்ஸி, ரொனால்டோ இணைந்து எடுத்து கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகி உள்ளது. 23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், கால்பந்து உலக கோப்பையை பிரபலப்படுத்தும் விதமாக LEGO நிறுவனம் தயாரித்த விளம்பரத்தில் ஜாம்பவான்கள் மெஸ்ஸி, ரொனால்டோ இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் இளம் தலைமுறை வீரர்கள் எம்பாப்பே, வினிசியஸ் இணைந்தது கால்பந்து ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் வெற்றி :
சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
அமெரிக்காவில் நடைபெற்ற இந்தத் தொடரில் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ஹங்கேரியின் அன்னா பண்டார் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய மேடிசன் கீஸ் 6க்கு 2, 7க்கு 5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
Related Link

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது லீக் போட்டி

