கைப்பற்றப்பட்ட பணம் ஒப்படைப்பு :
ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் உயிர் ஆவணங்கள் காண்பிக்கப்பட்டதால் ஒப்படைக்கப்பட்டது.
மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நிலை கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காமாட்சி அம்மாள் மற்றும் சார்பு ஆய்வாளர் கணேசன்
தலைமையிலான குழு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சென்னை பதிவு எண் கொண்ட கார் ஒன்றை வன்னியம்பட்டி அருகே மறித்து நிறுத்தி சோதனை செய்தபோது.
அதில் பயணித்த கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் அப்துல் ஜலீல் என்பவரிடமிருந்து ரூபாய் 105080 பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை தேர்தல் நடத்தும் துணை அலுவலர் பாலமுருகன் ஒப்படைத்திருந்த நிலையில் வேட்பாளர் உரிய ஆவணங்களை காட்டி தனது சொந்தமான 105080 ரூபாயை பெற்று
சென்றார்.
Related Link

நாதக வேட்பாளர் சவுந்தர்யாவை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை

