Dailyhunt
வரட்டாறு அணையில் இருந்து தண்ணீர் எடுக்கும் திட்டம்

வரட்டாறு அணையில் இருந்து தண்ணீர் எடுக்கும் திட்டம்

NewsTamil 24X7 3 weeks ago

அணையில் இருந்து தண்ணீர் எடுக்கும் திட்டம் :

ர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கீரைப்பட்டி அருகே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமையில் விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அரூர் அடுத்த வள்ளி மதுரை வரட்டாறு அணை மூலமாக 25க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதால் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பெரிதளவில் பயன் பெற்று வருகின்றனர்.

குறிப்பாக மழைக்காலங்களில் மட்டுமே இந்த அணை நிரம்பும், மழை இல்லாத போது அணை முழுவதும் தண்ணீர் இல்லாமல் வற்றிப் போகும் நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் அரூர் நகராட்சிக்கு உட்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில்.

வள்ளி மதுரை அணை அருகே ஏற்கனவே 3 கிணறுகள் வெட்டி எடுக்கப்பட்டு அதன் மூலம் மணிக்கு சுமார் ஒரு லட்சம் கன அடி குடிநீர் சென்று கொண்டிருக்கிறது. தற்போது இரண்டாம்
கட்ட திட்ட பணிகள் என்ற பெயரில் மீண்டும் இதே பகுதியில் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் திட்டம் ஐந்து ராட்சத கிணறுகள் அமைக்கப்பட்டு.

ராட்சத மின் மோட்டார் மூலம் மணிக்கு 5 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டால் அணையைச் சுற்றியுள்ள விவசாயிகள் பெரிதளவில் பாதிக்கப்படுவார்கள் எனவும், ஏற்கனவே அணை
தண்ணீரில் இல்லாமல் மற்றும் நிலையில் இந்த திட்டம் தங்களுக்கு தேவை இல்லை என தெரிவிக்கும் 25க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள்.

வாணியாறு அணை மூலமாகவும், அதேபோல தென்பெண்ணை ஆற்றில் இருந்து ஈச்சம்பாடி அணையில் இருந்து அரூர் நகருக்கு குடிநீர் கொண்டு வரலாம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே ராட்சத கிணறு அமைக்கும் பணியை கைவிட்டு அதற்கு மாற்றாக விவசாயிகள் பாதிக்காத வகையில் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கும் விவசாயிகள் இந்த திட்டத்தை கைவிடும் வரை அறவழியில் போராட்டம் செய்வோம் எனவும், இல்லையென்றால் தேர்தலை புறக்கணிப்போம் என தெரிவித்துள்ளனர்.

Related Link

புறம்போக்கு இடம் வனப்பகுதியாக மாற்றப்பட்டதாக அறிவிப்பு

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: NewsTamil 24X7