ஒன்இந்தியா எக்ஸ்க்லூஸிவ்
49k Followersநாளந்தாவே மற்றும் அகஸ்தியா அறக்கட்டளை மாணவர்கள் இணைந்து 'வீடு என்றால் என்ன?' ('What is Home?') என்ற தலைப்பில் ஒரு ஆன்லைன் கண்காட்சியை நடத்த உள்ளனர்.
வரும் செப்டம்பர் 26ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் பகல் 12.30 மணி வரை இந்த ஆன்லைன் கண்காட்சி நடைபெற உள்ளது.
நம்மில் பெரும்பாலானோர் வீடுகளுக்குள்ளேயே அடைபட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், உண்மையிலேயே 'வீடு என்றால் என்ன?' என்பதைக் கண்டறியும் நோக்கில் இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரு அறக்கட்டளைகளைச் சேர்ந்த மாணவர்களும் தங்கள் படைப்புகளை இக்கண்காட்சியில் படைக்க உள்ளனர்.
நாளந்தாவே அறக்கட்டளை மாணவர்கள், கடந்த 7 வாரங்களாக CPB Prism உதவியுடன் நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது (#TeenPhotoAcademy and #EyespywithCPB) இந்தப் படைப்புகளை உருவாக்கியுள்ளனர்.
'வீடு என்றால் என்ன?' ஆன்லைன் கண்காட்சியில், சென்னையைச் சேர்ந்த குருநாதன் ராமகிருஷ்ணன் (https://www.instagram.com/gurunathanramakrishnan/) என்ற புகைப்படக் கலைஞர் கலந்து கொண்டு தன் அனுபவங்களைப் பகிர உள்ளார்.
இந்தக் கண்காட்சிக்குத் தொடர்ந்து தன் ஆதரவை அளித்துவரும் மூர்த்திநாயக் அறக்கட்டளை (MurthyNayak Foundation) நிறுவனர் வசந்த் நாயக்கும் இதில் பங்கேற்க உள்ளார்.
இக்கண்காட்சியில் பங்கேற்றுப் பேச வேண்டும் என விரும்புவோர், https://bit.ly/3mv4TAJ என்ற ஜூம் (Zoom) தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
யூடியூப் (https://bit.ly/33M1lRZ) மற்றும் ஃபேஸ்புக் (https://bit.ly/2FEBljC) தளங்களில் இந்த ஆன்லைன் கண்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளந்தாவே அறக்கட்டளை:
இது நாட்டிலுள்ள ஏழைக் குழந்தைகளுக்கான லாப நோக்கமற்ற ஒரு தன்னார்வ அமைப்பாகும்.
இசை, நடனம், தியேட்டர், வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களின் மூலம் அவர்களுடைய குரல்களையும் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் எழுப்புகிறது இந்த அறக்கட்டளை.
நாளந்தாவே அறக்கட்டளையின் நிறுவனர் ஸ்ரீராம் ஐயரும் இக்கண்காட்சியில் பங்கேற்று மாணவர்களை உற்சாகப்படுத்த உள்ளார்.
அகஸ்தியா அறக்கட்டளை:
உருமாறும் கல்வி அமைப்பான இது, 1999 முதல் இந்தியாவில் உள்ள ஏழை கிராமப்புற மற்றும் நகர்ப்புற குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களிடம் கற்றலை தீவிரமாக பரப்புகிறது.
ஆந்திராவின் குப்பம் அருகே அகஸ்தியாவின் 172 ஏக்கர் வளாகம் படைப்பாற்றல் மையமாக செயல்படுகிறது. மேலும், சுற்றுப்புற கிராமங்களிலிருந்து 500க்கும் அதிகமான குழந்தைகள் தினமும் இங்கு வருகை தருகின்றனர்.
https://www.agastya.org/about-us/ என்ற முகவரியில் அகஸ்தியா அறக்கட்டளை குறித்து அறிந்து கொள்ளலாம்.
Disclaimer
This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt Publisher: Oneindia Exclusive Tamil