Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஆட்சி அமைப்பதில் சிக்கல்: இன்று பனையூரில் தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்.

ஆட்சி அமைப்பதில் சிக்கல்: இன்று பனையூரில் தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்.

சென்னை: ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத நிலையார், தவெக ஆட்சி அமைப்பதில் சிக்கல் எழுந்து உள்ளது.

இதையடுத்து, இன்று தவெக தலைமை அலுவலகமான பனையூர் அலுவலகம் வர தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

தவெக தலைவர் விஜய், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில் இன்னும் பெரும்பான்மை கிடைக்காததால் , பதவி ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இடையடுத்து, த.வெ.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் பனையூரில் இன்று நடைபெற உள்ளது'

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அக்கட்சிக்கு இல்லாததால், ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. அதிமுகவில் ஒருதரப்பு ஆதரவு தர தயாராக உள்ள நிலையில், இதுவரை தவெக தரப்பில், அதிமுக ஆதரவு பெறுவது குறித்து உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வசதிகள், விஜய் அலுவலகத்தில் இருந்து கிளம்புவதற்கு முன்பே, அவருக்காக வைக்கப்பட்டிருந்த அந்த நான்கு கான்வாய் வாகனங்களும் திருப்பிப் பெறப்பட்டு தலைமைச் செயலகம் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த பரபரப்பான சூழலில் இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் பனையூரில இன்று தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெறுகிறது. இதில், அதிமுக ஆதரவு உள்பட ஆட்சி அமைப்பது தொடர்பான விவாதிக்கப்பட உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Patrikai