Dailyhunt
புலி திரைப்பட விவகாரம்: விஜய் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யக் கோரி வழக்கு..

புலி திரைப்பட விவகாரம்: விஜய் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யக் கோரி வழக்கு..

சென்னை: புலி திரைப்பட விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015-ல் வெளியான 'புலி' திரைப்படத்திற்காக நடிகர் விஜய் பெற்ற ரூ. 15 கோடி சம்பளத்தை வருமான வரி கணக்கில் மறைத்ததாகக் கூறி, ரூ. 1.50 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், அந்த அபராதம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் 2026 பிப்ரவரியில் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பில்,2 015 ஆம் ஆண்டு 'புலி' பட தயாரிப்பாளர்கள் வழங்கிய ஆவணங்களின்படி, விஜய்க்கு காசோலை மூலம் ரூ. 16 கோடியும், ரொக்கமாக ரூ. 4.93 கோடியும் வழங்கப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். சோதனையின் போது இதை ஒப்புக் கொண்ட விஜய், பின்னர் ரூ. 15 கோடி கூடுதல் வருமானத்தை கணக்கில் காட்ட ஒப்புக் கொண்டதாகவும், எனவே வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 271AAB (1)-ன் கீழ் விதிக்கப்பட்ட அபராதம் சரியானது என்றும் அவர் கூறினார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதையடுத்து, இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Patrikai