Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
முறிந்தது திமுக - காங்கிரஸ் கூட்டணி! தவெகவுடன் கூட்டணி தொடரும் என அறிவிப்பு..

முறிந்தது திமுக - காங்கிரஸ் கூட்டணி! தவெகவுடன் கூட்டணி தொடரும் என அறிவிப்பு..

சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தவெக முன்வந்துள்ள நிலையில், அக்கட்சிக்கு ஆதரவு வழங்க காங்கிரஸ் தலைமை முன்வந்துள்ளதால், இரு கட்சிகளுக்கு இடையேயான நட்பு முடிவுக்கு வந்துள்ளது.

'தேசிய அளவில் காங்கிரஸ்க்கு மாற்றாக , எதிர்க்கட்சிகளின் இன்டியா கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு முதல் அளாக தோள் கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின். மேலும் பல்வேறு பிரச்சினைகளில் காங்கிரஸ் கட்சி ஆதரவாக களத்தில் முதல்ஆளாக நின்றவர் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின். அதுமட்டுமின்றி, காங்கிரஸ் கட்சி மீதான அதிருப்தி காரணமாக, மேற்குவங்க முதல்வர், மமதா பானர்ஜி, சந்திரசேகர் ராவ் தலைமையில் 3வது அணி அமைக்க முயன்றபோது அதில் இணைய மறுத்து, காங்கிரஸ் கட்சிக்காகவும், ராகுல் காந்தியின் நடட்புக்காகவும் துணை நின்றவர் மு.க.ஸ்டாலின். ஆனால், இன்று ஆட்சி அதிகாரத்துக்காக பல ஆண்டுகால நட்பை முறித்துக் கொண்டு புதிதாக தொடங்கியுள்ள கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில திமுக உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ளதுடன், தவெக ஆட்சி அமைக்க நிபந்தனையுடன் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், இந்த கூட்டணி அடுத்து வரும உள்ளாட்சி, மக்களவை தேர்தலிலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் இணைந்து, தமிழக மக்களின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை மதித்து, இளைஞர்களின் கனவுகளையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளனர்.' என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தவெக தலைவர் விஜய் ஆதரவு கேட்டு எழுதிய கடிதம் தொடர்பாக விரிவான ஆலோசனை நடைபெற்றதாகக் கூறினார்.

இதையடுத்துரு, டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் கூட்டத்திற்கு பிறகு, அவசரமாக காணொலி மூலமாக நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸின் அரசியல் விவகார குழு கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவை வழங்குவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேசமயம், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கும் வகையில் அமைச்சரவையில் காங்கிரஸூக்கு இடம் வழங்க வேண்டும், அதிமுக, பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஆதரவை பெறக்கூடாது என்று காங்கிரஸ் நிபந்தனை விதித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிபந்தனைகளுக்கு தவெக சம்மதம் தெரிவித்ததால் தோழமை கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கு காங்கிரஸ் உதவி செய்யும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் தவெகவிற்கு ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள கடிதத்தில், 'தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆதரவு தருமாறு இந்திய தேசிய காங்கிரஸிடம் அதிகாரப்பூர்வமாகக் கேட்டுக்கொண்டார். தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்கள், மதச்சார்பற்ற மற்றும் மக்கள் நலன் காக்கும் ஒரு மாற்றத்திற்காகத் தங்களின் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர். விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.

மதச்சார்பின்மை மற்றும் சமூக நலக் கொள்கைகளுக்காகத் தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி, மக்களின் இந்தத் தீர்ப்பை மதிப்பதைக் கடமையாகக் கருதுகிறது. அதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் முழு ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளனர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லாத வகுப்புவாத சக்திகளை இந்தக் கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் எங்களது ஆதரவு அமையும். தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் இடையிலான இந்தக் கூட்டணி, தந்தை பெரியாரின் சமூக நீதிச் சிந்தனைகள் மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டக் கொள்கைகளில் உறுதியான அர்ப்பணிப்புடன், பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியைத் தமிழகத்தில் மீண்டும் கொண்டு வர வரும் காலங்களிலும், தசாப்தங்களிலும் பாடுபடும்.

இந்த உடன்பாடு வெறும் ஆட்சி அமைப்பதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தல், மாநிலங்களவை தேர்தல் மற்றும் 2029 நாடாளுமன்றத் தேர்தல்ளுக்கும் தொடரும். விஜய் மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் இணைந்து, தமிழக மக்களின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை மதித்து, இளைஞர்களின் கனவுகளையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளனர்.' என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் 15 ஆண்டுகள் நீடித்து வந்த திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Patrikai