Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நார்வே பட்டத்து இளவரசிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை

நார்வே பட்டத்து இளவரசிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை

நார்வே பட்டத்து இளவரசி மெட்டே-மாரிட் (52) வெற்றிகரமாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக அரச மாளிகை தெரிவித்துள்ளது.

2018-ல் அவருக்கு 'பல்மனரி ஃபைப்ரோசிஸ்' என்ற நுரையீரல் நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

மெட்டே-மாரிட்டின் உடல்நிலை சமீபத்தில் மோசமடைந்ததால், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் அவர் சேர்க்கப்பட்டதாக ஒஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனை ஜூன் 5-ஆம் தேதி தெரிவித்திருந்தது.

அறுவை சிகிச்சை செய்யப்படாவிட்டால் அவர் ஓராண்டு மட்டுமே உயிர் வாழ வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், அவர் இன்னும் சில வாரங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தெரிவித்த வாழ்த்துகளுக்கு இளவரசர் ஹாக்கன் மற்றும் மெட்டே-மாரிட் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், மெட்டே-மாரிட்டின் முந்தைய உறவில் பிறந்த மகன் மாரியஸ் போர்க் ஹோய்பி, பாலியல் வன்கொடுமை மற்றும் குடும்ப வன்முறை வழக்கில் குற்றவாளி என ஜூன் 15ம் தேதி அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.

மேலும், அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் முன்பு தொடர்பில் இருந்ததற்காக மெட்டே-மாரிட் மன்னர் மற்றும் மகாராணியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்த சர்ச்சைகளின் பின்னணியில், நார்வே முடியாட்சிக்கான மக்கள் ஆதரவு அண்மையில் குறைந்துள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Patrikai