Dailyhunt
விஜய் ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு கொடுக்காது! கே.பி.முனுசாமி

விஜய் ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு கொடுக்காது! கே.பி.முனுசாமி

சென்னை: விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு கொடுக்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிக இடங்களை பெற்றுள்ள தவெக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளது. தவெகவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்துள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகிறது. அதற்கு சில கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்புக்கு மத்தியில், தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என அதிமுக முக்கிய பிரமுகர்கள் சிலர் கூறி வந்தனர். இதனால் அக்கட்சிகளுக்கு சலசலப்பு எழுந்தது. அதிமுக இரண்டாக உடைய உள்ளதாகவும் செய்திகள் பரவின. இந்த சலசலப்புக்கு மத்தியில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் நடைபெற்றது.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொருளாளர் கே.பி.முனுசாமி, தவெகவுக்கு ஒருபோதும் ஆதரவு கொடுக்காது என்று திட்டவட்டமாக கூறினார்.

'தவெகவுக்கு அதிமுக ஆதரவு என்று ஊடகங்களில் வெளியாகி வரும் செய்தி தவறானது. தவெகவுக்கு ஆதரவு குறித்து எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேசவில்லை என்று கூறியவர், அதிமுக மிகப்பெரிய இயக்கம்; எந்த சூழலிலும் தவெகவை ஆதரிக்காது. எங்கள் பொதுச்செயலாளர் பழனிசாமி அனுமதியுடன் இதனை தெரிவிக்கிறேன்' என்று கூறினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Patrikai