உலகம்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் இந்தியாவுக்கு நன்றி

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் கொரோனா பாதிப்பில் இருந்து தற்போது வரை முழுமையாக மீண்டு வர முடியவில்லை. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அரசியல் தலைவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இந்தியாவில் தற்போது முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியா மற்ற நாடுகளுக்கு தடுப்பூசியை அனுப்பி வைத்து உதவி செய்வது உலக நாடுகளால் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்தியா தனது நட்பு நாடுகளான பூடான், மாலத்தீவு, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு தடுப்பூசி அனுப்பி வருகிறது. இந்நிலையில் உலக அளவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். தகவல்களை பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் இணைந்து செயல்படுதல் மூலமே கொரோனா வைரசை தடுத்து மனித உயிர்களை காப்பாற்றமுடியும் என்றும் கூறியுள்ளார்.
#Thanks # to # India # for # its # continued # support # in # controlling # the # spread # of # corona #